பொய்கையில் நீந்தும் நிலவு அஹமது அலி
பொய்கையில் நீந்தும் நிலவே
##பொய் தனில் நீந்தி விடாதே!
தண்ணீரில் உலா வரும் வேளை
##தாமரையை கிள்ளி விடாதே!
காரிருளிலும் பால் ஒளி தருவாய்
##ஓரிரவும் கருமையாகி விடாதே!
....................==..............==.....................
நீலவானின் நீங்கிடா நித்திலமே
##கோளவடிவின் வெள்ளி வதனமே
கோடி மாந்தரின் கொள்ளை அழகே!
##ஓடி ஒளியாதே ஒற்றை ஒளிறே!
ஒளிவட்டமிடும் ஒப்பற்ற ஒயிலே
##ஒப்பனை கலையாதே ஓர் நாளுமே!
....................##..............##...........................
சிற்றலையில் சினுங்கிச் சிரிப்பாய்
##பேரலையில் கலக்கம் அடைவாய்
கைகளில் அள்ளிக் கொஞ்சிட
##கைக் குழந்தையாய் தவழ்வாய்
கண் கொட்டாமல் பார்த்து ரசிக்க
##கன்னியைப் போல் காட்சி தருவாய்
..................##...................##.........................
ஆதவன் அச்சுப் பதித்த நகலே
##பூதளம் பார்க்க பூத்த மலரே
வானின் வெள்ளி வண்ண வரவே
##தேனின் குளியல் உன்னால் நிலவே
பொய்கையில் நீ சிந்தும் எழிலால்
##மெய்யாய் மதி மயங்கிப் போகுதே!
...............##...................##...............................