பங்களாவில் வேலை செய்கிறோம்,,,(தாரகை)
பங்களாவை பளபளவென
துடைக்கின்றான்
பசியால் பார்வை மங்க,மயங்க
வேலைக்கார அப்பா,,
அவர்களின் கோடைக்கால
குளிர்தேச பயணத்திற்கு
பயண ஏற்பாடு செய்கிறாள்
வியர்க்க விறுவிறுக்க
வேலைக்கார அம்மா,
பெட்டியை வைக்கும் பொழுது
மகிழுந்தை தொட்டு ரசிக்கிறது
வேலைக்கார சிறுவனின் கைகள்,
கொழுகொழு குழந்தைகளை
தூக்கி வைத்துக் கொள்கிறாள்
தேகம் மெலிந்த
வேலைக்கார சிறுமி,
பாலுக்கு குழந்தை அழுகிறது
பரிமாறுகிறாள் பங்களாவாசிகளுக்கு
சமையல்காரி,,
புற்களுக்கு சிகை அலங்காரம்
செய்கின்றான்,
பரட்டை தலையுடன்
தோட்டக்காரன்,,
பூட்டிய பங்களாவை
பாதுகாக்கிறான்
வாயிற்காவலன்,
கதவில்லா வீட்டில்
மனைவி மக்களை விட்டுவிட்டு,