நம் நட்பு....
என் வாழ் நாளின் இறுதி கணம்
வரை ஒரு முறை கூட
என்னை பார்க்க
நீ வர வேண்டாம்
உன்னிடம் இருந்து எந்த
அன்பளிப்பும்
எனக்கு
எந்த அன்பளிப்பும்
வர வேண்டாம்...
அவ்வளவு ஏன்
உன்னிடம் இருந்து
எனக்கு ஒரு
பிறந்த நாள் வாழ்த்துக்
கூட வராமல் இருந்தாலும்
சரிதான்
ஆனால்
என் வாழ்நாள்
முடிந்து போனால் கூட
இறந்து கிடக்கும்
என் சில்லிட்டு போன
எனது உடல் கூட
உனது நினைவுகளைத்தான்
சுமக்கும்
அத்தனை
அழுத்தமானது
நம் நட்பு
எதற்க்காக பார்க்க வேண்டும்
பார்க்காமலே புனிதமானது
நம் நட்பு....