வாலியே....வானில் பறந்தாயோ ......!

மறைந்த கவிஞர் வாலிக்கு இறங்கட் பா.....
********************************************************************

தமிழ் காவிய புத்தகத்தை காலன் கிழித்து விட்டானோ ................? எங்கள் வாலி வானில்
பறந்து போனானோ ..............?

கவிக் குயிலே ...! எங்கள் தமிழ் கானக் குயிலே
நீ கண் மூடி போய்விட்டயோ..................................!
உன்னை மண் மூடிக் கொண்டாலும் ...............
என்றும் மறவாது தமிழர் நெஞ்சம் .!
நீ....................................................!
சினிமாவில் சிக்கெடுத்த சில்லரைக் கவி
சீக்கு பிடிக்காத சினிமா பாட்டு எழுதி
வார்த்தை சிக்கனத்தை கடை பிடித்தவன்

ஸ்ரீ ரங்கது ரங்கராஜனே ...! நீ ......!
ஒரு தமிழ் தங்கச் சுரங்கம் உன்னில்
தோண்ட தோண்ட பிறந்தது தமிழ்
என்னும் தங்க கட்டி தானே................!

உன் விரலில் இருந்து வந்த தமிழ் பாட்டு
பலருக்கு பணமாகியது .....சிலருக்கு
ஜீவ உணவாகியது ...! தமிழ் சினிமாவுக்கோ
ஒரு வரமாகியது ...................! தமிழர் நாவில்
நடன மாடியது......................!

உன் அண்ணன் கவி கண்ணதாசனின்
தன்னம்பிக்கை கவிதை வரியில்
நம்பிக்கை வைத்து வாழ்ந்தவனே நீ ......

தமிழர் நெஞ்சில் குடி இருந்த கோயில்
ஆனாய்....! அரச கட்டளையாய் இருந்து
அன்பே வா ... என்று சொன்னாய்......!
உயர்ந்த மனிதனுக்கு கற்பக மானவனே...!

நீரிலும் நெருப்பிலும் பாட்டெழுதியவனே....!
ரசிகர் நெஞ்சில் பறக்கும் பாவையாய்......!
உலகம் சுற்றிய வாலி(யே)பனே ...............!
இரவா புகழ் பெற்ற இமயமே ....................!
மறவாது உன்னை தமிழ் திரை உலகம் !

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (19-Jul-13, 5:57 am)
பார்வை : 77

மேலே