தமிழ்...

செம்மொழிகள் சிலவற்றுள்
சிறந்த மொழி எதுவன்றோ....

பாரெங்கும் பேசப்படும்
என் தாய்மொழித் தமிழன்றோ...

ஐந்து வகை இலக்கணங்கள்
அருமையாய் மொழியினை புகட்டிடுமே...

அசத்திடும் இலக்கியங்கள்
அறவே அறத்தினை உணர்த்திடுமே...

எம்
வள்ளுவரின் தத்துவங்கள்
உலகிற்கே பொதுமறையாம்...

பாரதியின் கவிச்சொற்கள்
மனதில் எழுச்சி விதைப்பவையாம்....

லகரங்கள் சுழற்றிடும்
நாவினை முழுமையாய்...

பிறமொழி புகுந்திடும்
நம்மில் எழுமையாய்....

எழுதியவர் : விஜயபாலகிருஷ்ணன் (19-Jul-13, 4:53 pm)
பார்வை : 452

மேலே