வாலி நீ மறைந்தாலும்
தத்துவ கவிஞன் வாலி நீ இதுவரை
எழுத்து கூட்டி வாசித்தது தமிழை
முதல் வாய்ப்பு கிடைக்கும் வரை
சாப்பாட்டுக்கு வழி இல்லா நிலை
மனம் திறந்து மேடையில் சொன்ன
ஒரு பெரிய உண்மை
விருது பத்மபூஷன் வழங்கியது உன்
படைப்புகள் தந்த தமிழுக்கு
நான்கு தலை முறைகளுக்கு எழுதியது
உன் பாடலின் புரட்சி தந்த வேட்கை
தமிழ் சினிமா உன்னை தத்து எடுத்து
பாடல் பதினைந்து ஆயிரம் பதிவேட்டில்
இளசுகள் தொடங்கி பழசுகள் வரை நீ
பாடல் தந்த கார வரிகள் ஏராளம்
தமிழ் சினிமாவுக்கு நீ ஒரு வரப்பிரசாதம்
உன் தூரிகை தந்த பாடல்கள் தாராளம்
தமிழ் சினிமா உனக்கு தலை வணங்கும்
சகாப்தம் கொண்டது உன் படைப்புளால்
சாகா வரம் பெற்ற உன் பாடல்கள் என்றும்
சரித்திரம் படைத்தது தமிழ் சினிமாவில்
முதுமை காணாத உன் பாடல் வரிகள்
தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெருமை
கவிஞர்.வாலி ! நீ மறைந்தாலும் உன்
படைப்புகள் தாலாட்டும் தென்றலாக
கவிஞர். ஸ்ரீவை.காதர்.