பெண்களென்ன பாபர் மசூதிகளோ!
பெண்களென்ன பாபர் மசூதிகளோ!
ஆண்களெம்மை இடிப்பதற்கு!
இடிக்கத்துணியும் ஆண்களே
கட்ட மட்டும் மறுப்பதேனோ!
பெண்களென்ன தங்கமோ!
ஆண்களெம்மை உரசுதற்கு!
பொன்னில்லை எனபதால்
கண்ணீரை உதிர்க்கிறோம்!
பெண்களென்ன சிலைகளோ!
ஆண்களெம்மை இரசிப்பதற்கு!
அரங்கேறாக் கலைகளாய்
அறை முடங்கிக் கிடக்கிறோம்!
பெண்களென்ன புறம்போக்கோ!
ஆண்களெம்மை மேய்வதற்கு!
தரிசாத்தான் ஆவோமோ!
கருகித்தான் சாவோமோ!
கொ.பெ.பி.அய்யா.