நிலவும் நானும்
வீதிவீதியாக சுற்றி வருகிறேன் ஆனால
எனக்கு வீடென்று ஏதுமில்லை !
என்னை சுற்றி இருப்பவர் பலர் ஆனால்
எனக்கு துணையாக எவருமில்லை!
ஊரெல்லாம் உறங்கும் கூட்டினுள்ளே
நான் மட்டும் உருளுகிறேன் வீதியினிலே !
என்னை காட்டி சோறூட்டும் தாயுண்டு ஆனால்
எனக்கு சோறூட்ட யாருமில்லை!
என்னை போல யாருமில்லை என்று
எண்ணி இருந்தேன் நேற்று வரை
இன்று உன்னை கண்டதும்
ஆறுதல் அடைந்தேன் வெண்ணிலவே!
எனக்கும் உனக்கும் ஒரே
வித்தியாசம்தான் வெண்ணிலவே!
நானோ தெரு வீதியில்!!