வம்பும் வதந்தியும், புறம் கூறுதல்..

கண்ணீரில் எழுதப்படும் எழுத்துக்கள்
சிலருக்கு வாழும்,வாழ்கின்ற வாழ்க்கை,
கவலையில் பகிரப்படும் நிகழ்வுகள்,
சிலருக்கு வேடிக்கைக் கதைகள்,

மனசில் உள்ளதைக் கொட்டும் உணர்வுகள்,
சிலருக்கு நக்கல், நையாண்டிப் பேச்சுக்கள்,
ரகசியமாய் சொல்லப்பட்ட விஷயங்கள்,
சிலரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்தும்

விஷமமான அவதூறு பரப்பும் செயல்கள்,
இங்கு பிறரின் தலையீட்டால்,பலரின்
நிம்மதியும், தூக்கமும் பறிபோகின்றன,
விஷத்தைப் பரப்பியவரோ, அற்ப சந்தோஷத்தில்.

எழுதியவர் : ஆனந்தி வைத்யநாதன் (21-Jul-13, 9:32 pm)
சேர்த்தது : Sun Anand
பார்வை : 99

மேலே