எண்ணங்களே வாழ்வை

எண்ணங்களே வாழ்வாய்,
வாழ்வே தவமாய்,
தவமே வலிமையாய்,
வலிமையே பொருளாய்,

பொருளே இன்பமாய்,
இன்பமே பகிர்தலாய்
பகிர்தலே வரமாய்,
வரமே உறவாய்

உறவே உணர்ச்சிகளாய்,
உணர்ச்சிகளே கலவையாய்,
கலவையே காவியமாய்,
காவியமே உருவமாய்

உருவமே ஓவியமாய்,
ஓவியமே அழகாய்,
அழகே வண்ணமாய்,
வண்ணமே இனிமையாய்,

இனிமையே மாயமாய்,
மாயமே அபிநயமாய்,
அபிநயமே புன்னகையாய்
புன்னகையே வதனமாய்

வதனமே உற்சாகமாய்,
உற்சாகமே ஊற்றாய்,
ஊற்றே அன்பாய்,
அன்பே மிகுதியாய்,

மிகுதியே காதலாய்,
காதலே ஸ்வாசமாய்,
ஸ்வாசமே இளமையாய்,
இளமையே தேனாய்

தேனே தேனிலவாய்,
தேனிலவே மகிழ்வாய்,
மகிழ்வே தேவையாய்
தேவையே பொறுமையாய்

பொறுமையே பெருமையாய்,
பெருமையே உயர்வாய்
உயர்வே தேடுதலாய்
தேடுதலே வாழ்வாய்.........

எழுதியவர் : ஆனந்தி வைத்யநாதன் (21-Jul-13, 9:35 pm)
சேர்த்தது : Sun Anand
பார்வை : 43

மேலே