இன்பத்திலும் ஒரு மனதாக்கம்..
சரணியனின் பல வருடக் கனவான சொந்த வீட்டின் 'கிரஹப்பிரவேசம்'சிறப்பாக நடந்து முடிந்தது. விழாவிற்கு வந்த உறவினர்கள் ,நண்பர்கள் அனைவரும் சரணியனுக்கு வாழ்த்துச் சொல்லியபடி இருந்தனர்.
சரணியனுக்கோ ஒரே ஒரு சந்தேகம்தான். அதை தெளிவுபடுத்த அருகிலிருந்த பால்காரர் முத்தையாவை அழைத்தான்."நானும் பல 'புதுமனை புகுவிழா' சடங்குகள்ல பார்த்திருக்கிறேன். அதுல பசுமாடு வீட்டுக்குள்ள வர்றதுக்கே ரொம்ப அடம்பிடிக்கும். ஆனா என் வீட்டில் மட்டும் உங்க மாடு சாதாரணமா உள்ளே வந்துடுச்சே எப்படி?" என்றான்.
அதற்கு முத்தையாவோ,"நிங்க வீடு கட்டுறதுக்கு முன்னாடி இந்த இடத்துலதான் தினமும் இந்த மாடு புல்லை மேயும் அந்தப் பழக்கத்துலதாங்கய்யா வேகமா உள்ள வந்துடுச்சு" என்றார்.
இதைக் கேட்ட சரணியனுக்கோ , புதுவீடு கட்டிய சந்தோஷத்திலும், 'நகர்மயமாதலின் தாக்கம் ஏனோ மனதைப்பிசைந்தது...