**தந்திர நரியிடம் தன்னை மறந்தேமார்ந்த காக்கை **

**தந்திர நரியிடம் தன்னை மறந்தேமார்ந்த காக்கை **
தோல்திரைந்திரி காலேந்தி உற்றதுய ரொன்றில்
லென்றெண்ணி முற்றிய அகவையிலும் சிவிகையி ளிட்ட
நங்கையின் கார்முகில் கடுப்பக் கூந்தலின்
ஸ்பரிச மலரிட்டபோ தடைந்த கவிஞனாய்
வறுமையில் வற்றலன்ன இருக்கும் அம்மூதாட்டி
வடைசுட்டுப் பிழைப் பவள்

வட்டதட்டி ளிட்ட வடையை
கயமை இல்லா கருங்காக்கை கவ்வி கொண்டு ஓடியது
வயிற்றின் பசி காக்கையை பிசைய
ஓய்ந்தோர் மரத்தி லமர்ந்து - வடை
யுண்ண விரைந்த போது துவண்டுபோ இருந்த நரி
வடை கண்டு வியந்தது

குருதியின் குதூகலம் பிய்த்து கொண்தோடியது
தங்கமொப்ப தரணியில் தரமான குரல் கண்டு
திரியும் கருங்கக்காகையே
"எனக்காய் நல்பன்பா டிசைவாயா? " என்றது

தந்திர நரி தன்னை தங்கரத மென்றதும்
தன்னை மறந்து பண்பாடிசைந்த போது
வாயின் வடை கீழ்விழுன்தது '
வீழ்ந்த வடை கவ்வி விரைந்தோடியது அன்நரி

பின், பொய் பொருந்தி புகழ்ந்து போந்த
நரியின் வலை வீழ்ந்தேமாற்ற முற்றத்து காக்கை
-சே .சிவரஞ்சனி

எழுதியவர் : சே .சிவரஞ்சனி (22-Jul-13, 1:14 pm)
சேர்த்தது : janipriya
பார்வை : 65

மேலே