நீ சிரிப்பாயா ?

உன் நினைவுகள்
அரும்பும் போதெல்லாம்
நான் தூங்கிப்போய்விடுகிறேன்
ஏனென்றால்...
தூக்கத்திலாவது உன்னை
தரிசிக்கமுடிகிறதே
..
யாரும் என்னை
பைத்தியம் என்று
சொல்லாதவரை
உன்னைக் காணவரும்
அந்த பாதையால்கூட
நான் ..
தூங்கிக்கொண்டேவருவேன்
சாத்தியமா என்ன
..
என்
சுகையீனத்துக்கு
மாத்திரைகளாய்
உன் புன்சிரிப்புகளையாவது
தந்துவிடு
...
மனம் கல்லாய்ப்போனவளே
சிரி
ஆனால் சிரிப்பால் ...
இவனைக் கொண்றுவிடாதே.
(1987 நன்றி சுவர்)

எழுதியவர் : mcafareed (23-Jul-13, 6:08 am)
சேர்த்தது : Mca Fareed
பார்வை : 48

மேலே