கவிதை (க்கு) ஆழி வாலி ! வாழி!!

பிறந்தது திருவரங்க மண்ணாம் - அதனால்
வெளுத்த தோல் மணி வண்ணா - மனக்காதுக்குள்
ஒலிக்கும் பாடல் காலத்தால் அழிக்கவொண்ணா
சிறந்த தமிழ் பாட்டரங்கில் வாலி தான் அண்ணா
கவி தையற் கலைஞர் வாலி
கவிதையர் தலைவர் வாழி
குறும்புக்கு வயதானாலும் - வாலிப
கவி கரும்பானாய் வாலி - வாழி!

மீசை முடி தாடி நரையில் வெளுத்ததாலோ
ஆசை மடி தமிழ் திரையில் வெளுத்து வாங்கிய வாலி
தமிழர்பால் தமிழின்பால் விளைந்த காதல்
எழும் ஈழத்தமிழின் பால் - வாலி தந்த பாடல்
பிரபாகரன் என்ற தமிழ் அமுதின் பால்.

வாலி கவிஞா !
வாழி நீ வாலி!
தமிழீழ விடுதலை
வலி பாட்டை உணர்ந்து
புலி பட்ட பாட்டை
வழிமொழிந்து கவிதை
யாத்து தந்தாயே
வாலி தாயே வாழி!
தமிழ் மாரி பாடலாலே
தமிழர் உளமார கொண்ட
காதல் புகழ் மாரி கொண்ட
வாலி! நீ வாழி!

நேர்நினறு வெல்லவொண்ணா
நிலை பெற்ற தமிழின் ஞானம்
கலைமுற்றும் - கூத்தின்
வாய்பூட்டை திறந்த பாட்டன்.
காலத்தால் அழிக்கவொண்ணா
கவிதைக்கு ஆழி வாலி ! வாழி!!

தமிழீழ விடுதலை
கதிரோன் தம்பி!
பிரபாகர சூரியனை
தலைவானாய் கொண்ட
அம்பி வாலி !
பல்லிளிக்கும் பலருக்கும்
ஆகாதவன் வாலி !
மாதவன் மாலிக்கு மேல்
ஆகா நீ ஆதவன் வாழி!

எழுதியவர் : (23-Jul-13, 2:37 am)
சேர்த்தது : thamileelan
பார்வை : 89

மேலே