யார் தான் காதலர்கள்??

கண்ணோடு கண்..
பேசிகொன்டால் தான்
காதல் மலருமா??
சரி..ஆனால்
கண் இல்லாதவனின் காதல்..!!

ஆசை வார்த்தைகள்...
பரிமாறி கொண்டால்
தான் காதல் வளருமா???
சரி ஆனால்
பேச முடியாதவனின் காதல்!!

இதழ் முத்தம் ..
இட்டுக்கொண்டாள்
தான் காதல் மலருமா??
சரி ஆனால்
இதழ் அருப்பட்டவனின் காதல்!!

கட்டி அணைத்துகொண்டாள் ..
தான் காதல் வளருமா???
சரி அனால்..
கை இல்லாதவனின் காதல்..!!

காதல் கதைகளை ..
கேட்டு பகிர்ந்துகொண்டால்
தான் காதல் மலருமா??
சரி அனால்...
காது கேளாதவனின் காதல்!!

அடிக்கடி சந்தித்துக்கொண்டால்
தான் காதல் வளருமா??
சரி அனால்..
நடக்க இயலாதவனின் நிலை??

உள் உணர்வுகளை ..
உன்னிடம் சொல்லினால்
தான் காதல் மலருமா??
சரி அனால்..
உண்மை பேசுபவனின் நிலை???

பழைய காதல் கதைகளை ..
நமக்குள் பகிர்ந்துகொண்டால்
தான் காதல் வளருமா??
சரி அனால்..
மனநிலை குன்றியவனின் காதல்!!

இவர்களிடம் ..
காதல் வராதா???
இல்லை ..
இவர்கள் காதலுக்கு தகுதி அற்றவர்களா??
சரி .
இவர்களுக்குள் தோன்றினால்..
அதற்கு பெயர் காதல் இல்லையோ???

எழுதியவர் : சுகன்யா ராஜ் (23-Jul-13, 11:09 am)
பார்வை : 186

மேலே