வாலி - சரித்திரம்

"மை"தனை ஊற்றியதுன் பேனாவிலென்றால்
மக்கியிருக்கும் உன் எழுத்துகள் சடுதியிலே
ஊற்றியது தமிழர் உள்ளங்களிலாதளால்
உயிரோடு இருக்குமிந்த உலகம் உள்ளவரை!

பன்முகக் கலைஞனாம்நீ
படித்தறிந்தேன் பத்திரிகைகளில்
திரையிசைப்பாடல்கள் தந்தாய்
திரைகதை தானும்தந்தாய்!

அன்றும் இன்றும்
ஆட்டுவித்தாய் - திரைதனை
கவியரசு காலமதிலும்
கவிப்பேரரசு காலத்திலுமே!

கவிஞ்ஞர்கள்பலர் வருவார் போவார்
கவிதைகள்பல வரும் போகும்
காவியத்தலைவன் நீ வருவாயோ
காலத்திற்கேற்ற கவிதைகள் படைக்க!

காலத்தால் அழியாத
காதல்பாடல்கள் தந்தாய்
காலங்கள் மாறினாலும்
காதல்கள் மாறாதென்று!

பிறப்பும் இறப்பும்
சரிதானிந்த சாமானியனுக்கு
சரிதானோ உனக்கு
சரித்திர நாயகனே!

முதுமை ஒன்றுதான்
முடிவென்று ஆகிவிட்டால்
வாலிபக் கவிஞனிந்த
வாலியின் உயிர்பிரிந்ததேன்!

காலனவன் கழுத்தைனெரிக்கவா
காலைப் பிடிக்கவா
காவியக் கவின்ஞனுந்தன்
காலத்தை மீட்டெடுக்க!

மறுபிறவி உண்மையென்றால்
மறுபடியும் பிறப்பாயோ
வாலிபக் கவிஞ்ஞனாமெந்தன்
வாலியாக மீண்டுமிங்கே!

கொடுத்திருப்பேன் என்னுயிரை
கொடுங்கோ(கா)லன் கேட்டிருந்தால்
உன்னுயிரை தந்துவிட்டாய்
என்னுயிர்தான் இருந்துமென்ன!

கதறுகிறேன்
கவலையிலே
கவிதைஎன்றார்
கண்டுகொண்டார்!

நிறுத்த மனமின்றி
நிறுத்துகிறேன் நான்
நீண்ட காலமது
நின்புகழ் வாழ்கவென்றே!

எழுதியவர் : இட்ஸ் மீ (24-Jul-13, 2:50 am)
சேர்த்தது : நாகராஜன்
பார்வை : 110

சிறந்த கவிதைகள்

மேலே