ஒரு பந்தயம் நகைச்சுவை 30

வடிவா ;எப்பா செந்தா! ..வாப்பா விளையாடலாம்...
செந்தா; வரேண்டா...என்ன விளையாட்டுடா?
வடிவா ;கண்ணாமூச்சி டா !
செந்தா;சரி சொல்லுடா !
வடிவா; ஒரு பந்தயம்
செந்தா; சொல்லுடா. என்ன?
வடிவா;என்ன பெட் கட்டுற ...உன்னால முடியாதுடா ..!
செந்தா;சரிடா ...பாப்போம் ..!
வடிவா ;10000 ரூபா பெட் கட்டனும் ஓகே வா ...!
செந்தா ; சரிடா ...என்னனு சொல்லு..
வடிவா; கண்ண மூடிக்கோ ...தெறக்கக் கூடாது ..சரிடா..
நா பத்து எண் ரதுக்குள்ள சொல்லணும் ...
செந்தா;என்னன்னு ...
வடிவா; நல்லா கண்ண இறுக்கி மூடிகிட்டு கண்ல இருக்குற முடி எத்தனணு சொல்லு ..பாப்போம் ..
செந்தா; ஐயையோ ! கண்ண மூடிகிட்டு எப்படிடா ?
வடிவா; பெட் கட்டியிருக்க 10000 வேணுமா ?வேணாமா?
செந்தா;ஐயோ இப்டின்னு தெரிஞ்சா ஒதுக்கமாட்டேனே ..
பார்த்தவர்; என்னண்ணே கண்ணா மூடிக்கிட்டு என்ன பண்றீங்க ..!
வடிவா; இந்தப்பா அங்க என்ன பேச்சு ...
பார்த்தவர்;கண்ண மூடிட்டு என்ன பண்றார் தியானம் பண்றாரா?
வடிவா; பந்தயம் கட்டியிருக்கான் ...ஒன்னு ரெண்டுன்னு சொல்லணும் ...10000 பெட் கட்டியிருக்கான் ..
பார்த்தவர்;அப்படியா? நானும் கலந்துகுரேனே ...
செந்தா; டேய்..வேணாம்டா...!
வடிவா; டேய் !வாய மூடு ..கண்ண தொறந்தா..நீ எனக்கு பணம் கொடுக்கணும் ...ஓகே வா..
செந்தா; ஐயோ கடவுளே ..! என் பொண்டாட்டி அப்பவே சொன்னா...இன்னைக்கு நீங்க வெளியில போகாதிங்க நேரம் சரியில்லன்னு ...அவ பேச்சை கேக்காம ...அவஸ்தைடா...சாமி ...பட்டாதான் புத்தி வரும்னு வேற சொன்னா ...!அய்யயோ !
வடிவா; என்ன அங்க முனகல்...
செந்தா; இல்லடா முருகா! என்ன மட்டும் காப்பாத்துடா..!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (24-Jul-13, 12:29 pm)
பார்வை : 269

மேலே