நான் உன்னை காதலிக்கிறேன்

நேற்றுவரை என்னிடம் தயக்கம் இல்லாமல்
யோசிக்காமல் பேசியவள் ... இன்று
ஒரு வார்த்தை பேசுவதற்கும்
யோசித்து யோசித்து ... தயங்கித் தயங்கி தான்
பேசுகிறாள் ..
நான் சொன்ன ஒரு வார்த்தையால் ...
சொல்லாமலேயே இருந்திருக்கலாம்
"நான் உன்னை காதலிக்கிறேன்" என்று...!!!

எழுதியவர் : ரெங்கா (21-Dec-10, 8:36 am)
சேர்த்தது : renga
பார்வை : 662

மேலே