மனதினில் சுமந்தேனே
நினைவினில் நீயானாய்
கனவினில் நீயானாய்
உயிரினுள் ஒன்றானாய்
உறவினில் இரண்டானாய் ,
உன் குரல் கேளாமல்
என் உயிர் துடிக்காது,
உன் மொழி கேளாமல்
என் விழி மூடாது ,
மனதினில் சுமந்தேனே
மறுப்பது சரிதானா
மயக்கத்திலும் என்னை
மறப்பது முறைதானா
கிறக்கத்தில் நான் இல்லை
உறக்கத்தில் உன் தொல்லை
இறப்பது என்றாலும்
நீயின்றி நான் இல்லை
தடுக்கின்ற சுவர் ஏது
உடைக்கின்ற வழி கூறு
அனைக்கின்ற நாள் பார்த்து
அருகினில் உறவாடு
நெருக்கத்தில் நெருப்பாவாய்
நெஞ்சுக்குள் மழையாவை
நெருங்காத போதெல்லாம்
நெருஞ்சியின் முள்ளாவாய்,
வளை கொஞ்சும் கரத்தாலே
வளைத்திட மாட்டாயா
வலை பின்னும் விழியாலே
வசமாக்க மாட்டாயா
மறுஜென்மம் என்றாலும்
மறவாமல் வரவேண்டும்
மறுபடி பிறந்தாலும்
மடிமீது நீ வேண்டும்