பாரா முகமும் பழைய நட்பும்

இன்று ஓர்
இனிதான நாள்.
உத்வேகமான நாள்
நல்ல நட்பின்
நினைவு நாள்...

சுமார்
12 வருடஙகளுக்கு
முன்னால்...

படிப்பில்
படு பயங்கரமான
அதி புத்திசாலி - அவள்

அரைகுறையான
ஆங்கில ஆர்வலர்களாய்
நாங்கள்.

கண்ணகியின்
கதைக்கருவை
கலையாமல்
எடுத்துரைத்த
எங்கள்
தமிழாசிரியரின்
மகளவள்.

அவளது
இனிய தோற்றம்
யாரையும் இதுவரை
இன்னல்
படுத்தியதில்லை
ஏனெனில் அவள்

யாரையும்
ஏறெடுத்து பார்க்காத
இனிய இல்லத்தின்
கடை மகள்

ஆயிரங்கள் பக்கபலமிருந்தும்
தனிமரமாய் தானிருந்து
தன்னை வானுயுர
கொண்டு சென்ற
விடா முயற்சி கொண்டவள்

ஒரு மதிப்பெண் அதிகமாக்கிட
பல மணித்துளிகளாய்
புரட்டிய நான்கு பக்க
விடைத்தாள் நாட்கள் தான்
எங்கள் நட்புக்குழு
ஆரம்பம்..

பாடப்பிரிவுகள்
மேல்நிலை பள்ளியில்
நட்புகளை
பிரித்து விட்டன

மதிப்பெண்ணின்
ஏற்றத்தாழ்வும்
மனித வாழிடமும்
கல்லூரி முதல்
பிரித்து விட்டன

காணாத
அனைவரையும்
கண்களில்
காட்சிகளாய்
கண நேரங்கள்
நினைத்ததுண்டு

இன்று,
பன்னிரெண்டு
ஆண்டுகளுக்குப்பின
ஊடகத்தின் உதவியால்

திருமதியாய்
அரசுப்பணியில்
அலங்கரிக்கும் அவளிடம்
பேசி மகிழ்தேன்.
பழைய நட்புகளின்
நினைவோடு.

எழுதியவர் : நெல்லை பாரதி (27-Jul-13, 3:14 pm)
பார்வை : 237

மேலே