விருப்பத்தில் ஒரு வெறுப்பு..
விரும்பினாள் அவனை ...!
விருப்பம் காட்டினான்..
அவள் விருப்பத்திற்காக..!
விருப்பம் வந்ததுபோல் ..!!
அவள் விருப்பத்திற்கு மாறாக..!
அவன் விருப்பங்களை ..
விரும்பி வாழ ..
விரும்பினாள்...!!
விரும்ப தொடங்கினாள்.!
அவனையும் ...
அவனின் விருப்பமான...
விருப்பங்களையும் !!
விருப்பங்கள்
விளம்பரப்படும் முன்பே..!
வெறுக்க விரும்பிவிட்டான் ..!!
அவளும்
விரும்பிக் கொண்டாள்..!!
அவனின் விருப்பமான
வெறுப்புகளையும்..!!!