எதற்கு உன் கைகள் ?
நிறம் மாறி
காய்ந்தக் கரும்புத்தோகை
ஆடையில் -
புதைந்திருக்கும்
ஒளிவைர மணியே !
காவல் துறைக்
காலிகளுக்கு ,
காலை உணவாகிப் போன
உன் தமக்கையை
எண்ணிவருந்தி
அழுகின்ற பேதையே !
சுதந்திர நாட்டில்
தியாகியின் ஓய்வூதியத்திற்காக
ஊழல் பேர்வழிகளிடம்
அலைக்கழிக்கப்படும்
உன் தந்தையின் துயர் கண்டு
வேதனைப் படுபவளே !
பட்டம் பெற்று
வேலைக்கலைந்தும்
பல லட்சம் கேட்கும்
அரசு அதிகாரிகளைக் கண்டு
வெதும்பும் இளையபுராட்சி
மங்கையே !
இளம் விஞ்ஞானி
ஆகத்துடிக்கும்
தம்பியின் உயர் படிப்புக்கு
உன் கற்பை யே விலையாகக்
கேட்கும் கல்லுரி
காமுகனைக் கண்டு
அதிர்ந்து போனவளே !
நீ!- நான்கு சுவர்களுக்குள்
நலிவடைந்து
இமைகளுக்குள்ளேயே
கனவுகள் கண்டு ,
கண்ணீர்த் துளிகள்
உருண்டோடும் சாலையகிப்போன
உன் சுருங்கிய கன்னங்களுடன்
உன் கைகள் ----
சமையலறையில் காய் கறி
நறுக்குவதற்கு மட்டுமே
பயன் பட்டது போதும்
எடு அரிவாளை
வெட்டு சமூகத்துரோகிகளை !!!!!!!!!!!!!!!!!!!!
சமையலறைக்கா????
சமூகத்துரோகிகளை அழிக்கவா ????
எதற்கு உன் கைகள்????????????????
* எழில்*
27-07-2013