+தமிழுக்கு துரோகம் செய்யாதீர்!+

அழகான
*அன்பான

ஆசையான
*அற்புதமான

இன்பமான
*இனிமையான

உண்மையான
*மென்மையான

பண்பான
*பாசமான

நன்மையான
*நல்ல

கனி போன்று
*இனிக்கின்ற

மலர் போன்று
*மணக்கின்ற

பனி போன்று
*சிலிர்க்கின்ற

எத்தனையோ
தமிழ் சொற்கள்
இங்கு இருக்கையில்

வன்சொற்களை மட்டுமே
பேசிவாழும் சில மனிதரே!

தமிழுக்கு துரோகம் செய்வதில்
என்ன நியாயம் இருக்கிறது?

அதுவும்
உள்ளே மதுவரக்கன் சென்றவுடன்
நல்ல வார்த்தைகள் எல்லாம்
எங்கே சென்று ஒளிந்துகொள்ளும்?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (28-Jul-13, 6:59 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 95

மேலே