அன்னை தெரசா

நாங்கள் . . .
அன்னையென்று அறிந்தோர் பலர்
அதில் உம்மை இங்கு மறந்தோர் இலர்
விவிலியம் காட்டிய பரிவு வழி
சேரியை அடைந்த தென்றல் அவர்
மறித்த கருணைக்கு உயிர் தந்தாய்
மனம் நலிந்தோர் உறவாய் நீ வந்தாய்
நட்புறவு கொள்ளா நாடுகளின்
நல்லதோர் தாயெனில் நீயன்றோ. . . ? ?

எழுதியவர் : கல்பனா ரவீந்திரகுமார் (28-Jul-13, 7:05 pm)
பார்வை : 498

மேலே