எதை நோக்கி போகிறோம் நாம் ???
எங்கே சென்றுகொண்டு
இருக்கிறோம் நாம் ...
எதை நோக்கி போகிறோம் நாம் ...
மக்கிய சிந்தனைகள் ...
கலாச்சார சீரழிவுகள் ...
முன்னோக்கி தடுமாறி நடக்கிறோமா
இல்லை
தடம் மாறி நடக்கிறோம்மா??...
அல்லது
பின்னோக்கி வீறு கொண்டு நடக்கிறோமா?? ...
தொடருவோம் ...
வாருங்கள் ...
இந்த கிறுக்கியின் கிறுக்கல்களை
ஆராய இல்லை
இந்த சமுதாயத்தின்
அவல நிலையை அலச ...
அரை ஜான் வயிற்றை
நிறைக்க யார் யாரிடம் எல்லாமோ
கை நீட்ட வேண்டிவருகிறது !!
உலகில் அதிகம் பேருக்கு
இந்த அவலம் தான்!!
குடிக்க பணம் கொடுக்கும் மனசு
ஏழை படிக்க கொடுக்க மறுப்பதேன்??
கடவுள் உனக்கு பணம்
தந்ததே கொடுக்கத்தானே தவிர
வட்டிக்கு கொடுக்க அல்ல ...
நல்ல மனதோடு உதவினால்
வயதான காலத்தில்
அதில் ஒரு
நிம்மதி தெரியும்
இருப்பவன் இருப்பவனுக்கே
கொடுத்தால் அதில் ஏது உதவி ?
இல்லாதவனுக்கு கொடுப்பதல்லவா உதவி ??
நாம் நம்மை மட்டும் நேசித்தால்
வாழும் போதே சாகிறோம்
நாம் பிறரை நேசித்தால்
செத்த பின்பும் வாழ்கிறோம்
அவர்கள் மனதில் ஒரு தெய்வமாய் !!
உதவும் உள்ளம் நமக்கு இருந்தால்
மனித உருவில் தெய்வம் நாம்!!
மரங்கொத்திக்கும் நிழல் தருகிறதே மரம் !!!
தந்திர மனிதன் வாழ்வதில்லை
தைரிய மனிதன் வீழ்வதில்லை
வாழ்க்கையில் சாதனை படைதேன்
என்பதை விட யாரையும் வேதனை
படுத்தவில்லை என்பதே சிறந்தது
நாம் நம் சோம்பலை துரத்தி விட்டால்
நம் சாம்பல் கூட இவ்வுலகில்
சாதனை படைக்கும்
இதை எல்லாம் நான் சொன்னால்
பைத்தியக்காரன் என்று பட்டம்
சூட்டும் உலகமடா இது!!!
எங்கே சென்றுகொண்டு
இருக்கிறோம் நாம் ???
எதை நோக்கி போகிறோம் நாம் ???