நேற்று இன்று நாளை

நேற்று இன்று நாளை என்று
காலம் போனது என்னை விட்டு
காலை மாலை வேலை என்று
தூரம் போனது உறவு இன்று

நேற்று பார்த்த முகங்கள் மறைந்து
புதிதாய் உதிக்கு நட்பு இன்று
நட்பு என்று சொல்லிக்கொண்டு
முதுகில் குத்தும் காலம் இன்று

காதல் என்று சொல்லிக்கொண்டு
பாதம் வந்த உறவு இன்று
பாசமே பொய்யென்று
பணம் பின் போனது இன்று

இரத்தம் குதிக்கும் இளமையிலே
இள மைல்களை தேடியது
மனம் அன்று
முதுமை வந்து சூடையிலே
இறப்பை தேடுது மனம் இன்று

ஆரோக்கியம் ஆசிக்கவே
தரையில் நிற்காது
உடல் ஆட்டம் போட்டது அன்று
நோயும் வந்து ஆட்டையிலே
தரையில் ஆறடி தேடுது
மனமோ இன்று

செல்வம் செழிக்கையிலே
பல சேலைகளை தேடியது
மனம் அன்று
வரவுகள் குறைந்து
செலவுகள் மிகைக்கையிலே
மனம் ஆறுதலுக்கு சோலை
தேடுது இன்று

நேற்று இன்று நாளை என்று
காலம் போனது என்னை விட்டு
காலம் போகும் வேகத்திலே
பல பாடம் சொல்லுது எனக்கு இன்று

எழுதியவர் : நுச்கி மு.இ.மு (28-Jul-13, 3:50 pm)
Tanglish : netru indru naalai
பார்வை : 390

மேலே