காரணம் நான்தானே
என்னவள் மாய்ந் திருந்தாலோ
அவள் நினைவுகளுடன் - தனிமையில்
வாழ்ந்திருப்பேன்.
அவள் இன்னொருவன் தாரகையானதால்
நினைக்க முடியாமல் - தனிமையில்
வேதனைப்படுகிறேன்.
என் கண்ணீர் துடைக்க
என் புலம்பலை கேட்க
என்னை ஆறுதல் படுத்த
கூப்பிடும் தொலைவில்
என் நண்பன் இருக்கானே
அவள் கண்ணீர் துடைக்க
அவள் புலம்பலை கேட்க
அவளை ஆறுதல் படுத்த
அவளுக் கென்றிருந்த
ஒரே நண்பன் நான்தானே
என் மனதை கல்லாக்கி
நான் வாழ, உண்மையில்
தன் மனதை கல்லாகி
தன்னை மெழுகாற்க்கி
வாழ்வது அவள்தானே
அவள் வாழ்க்கை ஒளியானது
என்றிருந்தேன் ஆனால்
அவள்தன்னை திரியாக்கினால்
என்பதை இன்றல்லோ
உணர்ந்தேனே
என் கண்ணீர் சிந்தும்
மலையுடன் கலந்துவிடும்
அவளோ, தன் கண்ணீர் உறைந்த
தலையணை உரையை
தினமும் துவைத்தாளே
மறக்க நினைக்கிறேன் அவளை
மறக்க முடியவில்லை என்னவளை
எனினும், அவளின் இந்த
அவல நிலைக்கு காரணம்
நான்தானே, நான்தானே, நான்தானே !!!