ஆப்பிள் ஐ போன்

என்னோடு
நீ இருந்த
ஒவ்வொரு நொடிபொழுதும்
வரையறையில்லாமல் இதயத்தில் தேங்குதடி
பார்த்த மறுகணமே
பரவசம் நான் கொண்டேன்
உனையன்றி வேறில்லை
உறுதியாய் நானின்றேன்
முதல் ஸ்பரிசம்
இன்னும் என் கண்ணில்......
முதல் தழுவல்
என்றும் என் நெஞ்சில்
செல்லச் சிணுங்கல்கள் - தொட்டவுடன்
பளிச்சிடும் கண்கள்
பளீர் வார்த்தைகள்
பல்வேறு வித்தைகள்.....
என்னென்று நான் சொல்வேன்
என் வாழ்நாளே நீதான் என்பேன்
பிரிவொன்று கண்டாலே
பித்தம் தலைக்கேறும்
சித்தம் தடுமாறும்......ஆனாலும்
விலைமாதர் போலுன்னை விற்க மாட்டேன்
இறந்தாலும் இருந்தாலும்
என்னுடனே என்றும் வாழ்வாய்
என் ஆப்பிள் பெண்ணே!

எழுதியவர் : பாக்யா (31-Jul-13, 4:52 pm)
சேர்த்தது : bhagyanathan
Tanglish : Apple ai phone
பார்வை : 190

மேலே