கவிஞனே !உன் ஒவ்வொரு வரியும் !

கவிஞனே !
உன் ஒவ்வொரு வரியும்
அமுத மொழியைப் பொழியட்டும் !-தீமையைக்கண்டு
குமுறும் எரிமலை ஆகட்டும் !

சாதிமத வெறியை விரட்டட்டும் !
சமதர்ம வழியைக் காட்டட்டும் !

வேற்றுமை எண்ணத்தை ஒழிக்கட்டும்!
நாட்டுப் பற்றினை வளர்க்கட்டும்!

அச்சம் மனத்தில் தொலையட்டும் !
சித்தம் குளிர வைக்கட்டும் !

எழுதியவர் : எழில் சோம பொன்னுசாமி (31-Jul-13, 10:44 pm)
பார்வை : 96

மேலே