சாய்ந்து கொள்ளத் தோளின்றி..!

அவள் கண்களில்
குளமாகக் கண்ணீர்!
கரையை உடைத்து வரும்
வெள்ளம் போல!

மாலை நேரம்
இருண்ட மேகம்!
அவள் தலையணை
கண்ணீரில் ஈரமாக!

வெளியே மழைத்துளிகள்
சன்னல் கண்ணாடியில்..
அவள் கண்ணீருக்குத்
துணையாக..!

தலைவன் பிரிவை எண்ணி
நெஞ்சம் குமுற
சாய்ந்து கொள்ளத் தோளின்றி
அவள் துயருடன்..!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Aug-13, 10:35 pm)
பார்வை : 58

மேலே