என்னவளை மட்டுமாவது உறங்கவிடு.

எத்தனையோ நினைத்திருந்தேன்
என்னவென்று மறந்தே போனேன்
எப்போதும் உன் நினைவால்
என் கனவெல்லாம் கலைந்தே போனேன்
கண் மூடித் தூங்கும்போது
காதுக்குள்ளே ரீங்காரமிடுகிறாய்
கால் சதையைக் கடித்து
கதண்டு கதண்டாய் வீங்க வைக்கிறாய்
ஏய்... இரக்கமற்ற கொசுவே
என்னை முழுவதுமாய்த் தந்துவிட்டேன்
என்னவளை மட்டுமாவது உறங்கவிடு........!!!!!!!!!

எழுதியவர் : ரெங்கா (22-Dec-10, 8:58 am)
சேர்த்தது : renga
பார்வை : 476

மேலே