பேரோவியம்

இணையேதுமில்லை என் தாயே
உனக்கிங்கு விலையேதுமில்லை....
கரு கொண்ட நாள் முதலாய்
நீ பட்ட இன்னல்கள் ஏராளம்
நிமிடங்கள் ஓவொன்றும் போர்க்காலம்
பயணத்தின் பொழுதும் - சாய்ந்து
படுக்கின்ற பொழுதும் - உம்
கண்ணில் உறக்கம் தெரியும் - இருந்தும்
கருவில் கவனம் பதியும்....
பசியோடு இருப்பேன்னென்று
பசியாத உன் வயிறு
எனக்காய் பசியாறும்
சில நொடியில்.....ஆனால்
அவையாவும் வெளியேறும்
மறுநொடியில் (ஒவ்வாமை)
சிறு குடம் சுமந்தாலே - உன்
சிற்றிடை தாளாது...
நிறை குடமாய் என்னை
ஐயிரண்டு மாதங்கள் சுமந்தாயே
மடி மீது எனை காண
மறு ஜென்மம் கொண்டாயே
பொருள் கோடி தந்தாலும்
பொன் அள்ளி வைத்தாலும்
துலாபாரம் தோற்றுபோகும் நின் அன்பிலே
எத்தனை ஜென்மங்கள் நான் கொண்டாலும்
எதை கொண்டு
நான் பட்ட
கடன் தீருவேன் - என்
வினை ஆறுவேன்...
தினம் ஒன்று போதாது (அன்னையர் தினம்)
அனு தினமும் காணாது - உன்
பெருமை பாடச்சொன்னால்
எனைக் கருக்கொண்ட
கருவறையே திருவாலயம்
அதில் என்றென்றும்
நீதானே
பேரோவியம்.....

எழுதியவர் : பாக்யா (2-Aug-13, 4:46 pm)
சேர்த்தது : bhagyanathan
பார்வை : 56

மேலே