நட்பு... ஆயுள்..
நட்பு என்ற மூன்று எழுத்திற்கு வாழ்க்கை என்னும் ஐந்து எழுத்தை அசைக்கும் சக்தி காலம் உருவாக்கி கொடுத்ததா.. இல்லை கடவுள் உருவாக்கி கொடுத்ததா.. தெரியவில்லை!
ஆயுள் கொடுத்து சென்ற கடவுளின் அன்பை விடவும் உன் அன்பு விஞ்சி நிற்கிறது எனக்கான சந்தோஷங்களை மட்டும் கொடுத்து
மறக்க முடியாத தருணங்கள் முழுவதும் உன்னால் மட்டுமே நிகழ்ந்திருக்கிறது
வாழ்க்கையின் மகிழ்ச்சி பக்கங்களை மட்டும் எனக்கென்று புரட்டி காண்பித்து விட்டாய்
உன்னோடு என் ஆயுள் துவங்கவில்லை... நான் வேண்டுவதோ உன்னோடு என் ஆயுள் முடிய வேண்டும் என்பதே!
நட்புக்கு வரம் தரும் சக்தி இருக்கும் எனில் உன்னையும், என்னையும் பிரிக்காமல் இந்த ஆயுள் முடியட்டும்!!!