நட்பாக நட்போடு நட்பால்...

@-@-@-@-@-@-@-@-@-@-@-@-@-@-@-@

பணத்தின் பேதமை நட்பிலில்லை
ஆண்பெண் பிரிவினை நட்பிலில்லை
சாதிமத வேற்றுமை நட்பிலில்லை
பொறாமை வெருப்பு நட்பிலில்லை

அன்பும் அரவனைப்பும் நட்பிலுண்டு
கோபமும் குணமும் நட்பிலுண்டு
பகிர்தலும் பெருதலும் நட்பிலுண்டு
ஊக்கமும் ஆக்கமும் நட்பிலுண்டு

துன்பத்தை விரட்டும் நட்பு
இன்பத்தை பெருக்கும் நட்பு
வாழ்வை வளமாக்கும் நட்பு
நம்மை சிறப்பாக்கும் நட்பு

உறவிலும்கூட இருந்திடும்
இறுதிவரையில் தொடர்ந்திடும்
நட்பை போற்றி வளர்வோம்
நட்பால் நாமும் உயர்வோம் !!..

@-@-@-@-@-@-@-@-@-@-@-@-@-@-@-@

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (4-Aug-13, 9:51 am)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 192

மேலே