என்னவளே

உயிரே உனக்காக பனியாய் உருகுதடி
அடக்கம் செய்யாதே உன் அமைதியால்
வாழ்க்கை வாழ்வது ஒரு முறை தான்
வரம் தர மறுப்பது பெண் முறையோ!
எத்தனை நாள் உன் பின் வருவேன்
பித்தனை போலே தான் அலைவேன்
கண்ணே மணியே என பேசி
கண்மணி உன் மடி சாய
தினம் நான் கண்ட கனவு
நிலையில்லா வாழ்வில் நிஜமாகுமா?
அளவில்லா அன்பினில் எனை மூழ்த்தி
அடிமையாக்கி கொண்டு செல்வாயா?
பூவே உன் இதழ் உச்சரித்தால்
உயிர் பெறும் என் பெயர்தானே!
எங்கும் திரியும் உன் எண்ணமெல்லாம்
என் நினைவினில் தஞ்சம் அடையாதா?
வாடிய முகம் வாட்ட முரும்
அழகு மலரே முன் மலர்ந்தால்
கன்னி உன் கரம் பிடித்தால்
மாயமாய் மறைவேன் உன் மனசுக்குள்
இவையும் போதாத உள்ளம் திறந்து காட்டவா?
இனியவளே இனியும் காலம் தாழ்த்தாதே!!!!!!!
- செஞ்சிக்கோட்டை மா.மணி

எழுதியவர் : - செஞ்சிக்கோட்டை மா.மணி (6-Aug-13, 10:59 am)
சேர்த்தது : Mani 8
Tanglish : ennavale
பார்வை : 93

மேலே