அவளுள் தொலைந்தவன்

அவளுள் தொலைந்தவன்
இடைக்காலை பனிப்பெயல்களினால்
முகம்சாய்த்து கீழே விழுகின்ற
இளம்பரிதிகள் தொட்ட நறுமலர்கள்
இரவுக்கரை மிசைமோதி
தங்கிடாமல் திரும்புகின்ற
நீர்ச்சங்கிலி ஒப்பனைகளெல்லாம்
பிரயாகையில் தொகைந்திட்ட
சித்ரதாராவென
அவள் கூந்தல் பிடிக்க ஓடிய ஞாபகங்கள்
நீலநீரில் மூழ்கடிக்கப் பட்ட
அந்தர்வாகினிகளாக
காணாமல் சென்ற
நினை வங்கூரங்களை
தேடி யலைகின்றதொரு
மனுவேந்திய நித்திரைப் போக்குகள்
உள்ளங்கை அரிப்புகளினால்
அழிந்திடா ரேகைகளாக
நிச்சலனமடைகின்ற கூடுடை கூடல்கள்
தடைகள் தாண்டி
நிசப்தமடைந்திடும் நீரலைகளில்
அளந்திடமுடியா தென்றலின் ஆழங்களாக
அலைக்கழி துவேசங்களில்
நீந்திச்சென்றிடும் மகாபிரளயங்கள்
இருள்செறிந்த பொழில்களிடத்தில்
பிறைப் பொழியும் விழியுடையக்கள்வி
கந்தர்வன் மலைத்தோள் சாய்ந்தவளென
கர்வப்பார்வைக் கொண்டல்களாலே
நிலாமருட்சிக் கொள்கிறாள்
ஊழிக்காலங்களில் முயங்கித் திரியும்
சேவல்களென பிறவிப் பேதையாகிறது
பிறந்துக்கொண்டிருக்குமென் குழந்தைக் காதல்
இல்லாத புரிதல்களினால்
அவளுடனானவொரு
நெடும்பயணங்கள்தனில்
அனுசரன்