உன் வரம் வேண்டி!!

என் உயிரை வெறுக்கும் வரை உன்னை நேசித்தப் பின்னும் உன் மீதான நேசத்தை நிறுத்த இயலவில்லை !!
தூரத்து பச்சை கண்களுக்கு அழகு என்பதால் தான் என்னை இன்னும் தொலைவில் வைத்து இருக்கிறாயோ?
உன் வரவை கூட நான் எதிர்பார்க்க கூடாதா? எப்போது இந்த ஏமாற்றங்கள் முடியும்??
மற்றவர்கள் உன்னை சந்தித்தாக சொல்லும் தருணங்கள் 'என்ன பாவம் செய்தேன்' என நினைக்க செய்து விடுகிறது..
எதுவரை இந்த ரணங்களை சுமந்து கொண்டு இருப்பேன். ? ! ?
புரிதலை வெளிப்படுத்த ஒரு தருணம் வேண்டும்..
வரம் வேண்டி காத்திருக்கிறேன்... உன் தரிசனத்திற்காக!