காலம் ஓடுகிறது

காலம் சொல்லும் கதை என்ன?
காலம் மாறி வரும் பருவம் என்ன?
காலம் தோறும் தோன்றும் வலி என்ன?
காலம் முழுதும் பிறக்கும் கருத்துக்கள் என்ன?
கேள்விகளுக்கு விடை என்ன?
பதில்கள் தொங்கி நிற்கின்றன.
விடை அளிக்க முடியாது என்று நினைத்து
காலங்கள் நகர்கின்றன ஆமை வேகத்தில் அல்ல
முயல் போல் துள்ளிக் குதித்து ஓடுகின்றன
யாருக்கும் நிற்காமால் யாரையும் எதிர்பாராமல்..

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (7-Aug-13, 6:44 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 135

மேலே