காலம் ... நம்பிக்கை...

உன்னிடம் வெளிப்படுத்தாமல் வரிகளாய் வரைந்து வைத்துக் கொண்டு இருக்கிறேன்.. உன் மீதான அன்பினை!

புரிந்து கொள்வாய் என்ற நம்பிக்கையில்!

பொய்த்து போக என் அன்பு பொய் இல்லை என்பதால் முழுமையாய் காலத்தை சார்ந்து இருக்கிறேன்!

உன் மீது நான் வைத்திருக்கும் அன்பினை என் வரிகள் கூட முகம் தெரியாதவர்களுக்கு உணர்த்தி விட்டது..

இன்னும் உனக்கு உணர்த்தாதது எனக்கான ஏமாற்றமே!

எதிர்மறையான சொற்களை மனம் தாங்கி கொள்ளாது என்பதால் இன்னும் உன்னிடம் மெளன‌த்தை தொடர்கிறேன்.

அனைத்து பாரங்களையும் காலத்தின் மேல் இறக்கி வைத்து விட்டேன். அவை எனக்கு பதில் சொல்லும் என்ற நம்பிக்கையில்!

எழுதியவர் : மலர் (11-Aug-13, 3:29 pm)
பார்வை : 119

சிறந்த கவிதைகள்

மேலே