மன்னிப்பின் மறுபக்கம்..!
அம்மா சொன்னாள்
என்னை மன்னித்துவிடு..!
மன்னித்தேன் – நான்
அம்மாவின் அன்பு மகன்..!
அப்பா சொன்னார்
என்னை மன்னித்துவிடு..!
மன்னித்தேன் – நான்
ஆசானின் அரவணைப்பில்..!
சித்தி சொன்னாள்
என்னை மன்னித்துவிடு..!
மன்னித்தேன் – நான்
கருணை மகனானேன்..!
காதலி சொன்னாள்
என்னை மன்னித்துவிடு..!
மன்னித்தேன் – நான்
அவளுக்குள் உயிரானேன்..!
மனைவி சொன்னாள்
என்னை மன்னித்துவிடு..!
மன்னித்தேன் – நான்
அவளுக்கு தெய்வமானேன்..!
கணவன் சொன்னான்
என்னை மன்னித்துவிடு..!
மன்னித்தேன் – நான்
கண்ணியமிகு தாரமானேன் ..!
மகள் சொன்னாள்
என்னை மன்னித்துவிடு..!
மன்னித்தேன் – நான்
அவளுக்கு செல்லமானேன்..!
மகன் சொன்னான்
என்னை மன்னித்துவிடு..!
மன்னித்தேன் – நான்
அவனுக்கு குருவானேன்..!
நண்பன் சொன்னான்
என்னை மன்னித்துவிடு..!
மன்னித்தேன் – நான்
ஒரு மா மனிதனானேன்
தொழிலாளி சொன்னான்
என்னை மன்னித்துவிடு..!
மன்னித்தேன் – நான்
செல்வத்தால் மேலானேன் ..!
கடவுள் சொன்னார்
என்னை மன்னித்துவிடு..!
மன்னித்தேன் – நான்
கருணை பக்தனானேன்..!
இன்னும் இருக்கிறது
விரைந்து வாங்குங்கள்
காத்திருக்கிறேன் - நான்
மலர் மன தோட்டத்தில்..!!
பிதாவே இவர்களை
மன்னியும்... நான் நேற்றே
மன்னித்துவிட்டேன்..!
-----------------------------------
(அன்பளிப்பு :;;நண்பர் சந்தோஷ் குமாருக்கு)
குமரி பையன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
