பார்வைகள்

அழகும் அழகற்றதும்
பார்வையின் உள்வாங்கல்
நூலிடை இடைவெளியில்
சில அழகாகின்றன
மற்றவை
அழகின் எதிர்மறையாகின்றன!

பார்வையின் அளவுகோல்
பல நேரங்களில்
தப்பிதம் செய்கின்றன !

கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
என்கிற பட்சத்தில்
பார்வையில் அழகு
நிர்ணயம் ஆகுமா?

பெரும்பாலும்
பார்வைக் கோளாறால்
அழகுகள் சிதைக்கபடுகின்றன
அல்லாதவை சிறப்பிக்கபடுகின்றன
இதற்குப் பெயர்தான்
காட்சிப் பிழையோ?

அழகு என்பது
பொதுமைப் படுத்தமுடியாத
கட்டுக்குள் அடங்காத
மனித மனங்களின்
பிம்ப வெளிப்பாடாக
ஒன்றுக்கொன்று முரணாகி
தலையும் வாலுமற்ற
நிலையற்ற
ஒரு நொடியில்
தோன்றி மறையும் நீர்க்குமிழியே!

அது ஏனோ தெரியவில்லை ...
மனிதன்
நிலையில்லாதவைகளுக்காக
மிகவும் பிரயாசைப்படுகிறான்!!

வெ. நாதமணி,
11/08/2013.

எழுதியவர் : வெ. நாதமணி (11-Aug-13, 10:51 pm)
பார்வை : 58

மேலே