"வன்முறைக்காதல்"
வாஞ்சைக்காதல், வன்மக்காதல்
வராக்காதல் , விழாக்காதல்
காதல் பலவகை - என் காதல்
வன்முறைக்காதல்.
ஏழு நாள் சிகப்பழகா?
எவன் சொன்னான்?
நீ இரண்டு அறை விட்டாய்,
அன்றே சிவந்தது கன்னங்கள்
உன் அப்பாவும் அண்ணனும்
அந்த அடி அடித்தார்கள் அன்று,
அவர்களுக்கு தெரியாது பாவம் - உனக்காக
வாங்கும் அடி வலிக்காது என்று.
நீ போட்டு தேய்த்து பிய்த்த
செருப்புகளை விட
என்னை போட்டு அடித்து பிய்த்த
செருப்புகள் தான் அதிகம்.
மருத்துவமனை தனில் இரத்ததானம்
செய்ததை விட
உன் மகளிர்க் கல்லூரி வாசலில் தான்
அதிகம் செய்திருக்கிறேன்.
நண்பன் சொல்லுகிறான்
வடிவேலுகூட இப்படி வாங்கியதில்லையென்று
நான் சொன்னேன்
வாங்கிய தெதுவுமே அடியில்லை என்று.
இதழால் இட்டால் தான்
முத்தமில்லை - உன்
இருகைகளால் விட்டாலும்
முத்தம் தான்.
நீ முத்தமிட்டுக் கொண்டேயிரு
என் கராத்தே காதலியே
நானும் என் கன்னங்களும்
தயார்.
பி.கு : இது நகைச்சுவைக்காக எழுதப்பட்ட கற்பனைதான் என்றாலும், பலர் வாழ்க்கையில் உண்மையாகவும் இருக்கலாம், யார் கண்டது.