சுதந்திர தேசம்!

அறுபத்தைந்து கால சுதந்திரம்!
அனுபவித்தோம் நாம் தினம் தினம் !
சாதிகள் இல்லையடி பாப்பா!
சாடினான் பாரதி அன்று !
சாதியால் இளவரசன் இறந்தான் இன்று!
பாகிஸ்தான் பலமுறை தாக்கினாலும்
பாவ மன்னிப்பு பரவலாய் கொடுப்போம்!
நிலக்கரி ஊழல் நினைவில் இல்லை!
நிருபாயா வழக்கில் நீதியே இல்லை!
அலைவரிசை ஊழலில் ஆளே இல்லை!
அனைத்தையும் மறந்து மன்னிக்கும்
அழகியே தேசம் இது!
இலங்கை எங்கள் மீனவனை துன்புறுத்தும் -
இருந்தும் இறந்தும் நாங்கள் ஆதரிப்போம்!
சீன ராணுவம் எங்கள் சிறகொடிகும்
சிரித்து கொண்டே சமாதனம் பேசுவோம்!
வெள்ளையனை வெளியேற்றி பெற்ற சுதந்திரம்!
வெளிநாட்டால் எங்களுக்கு பொருளாதார சுதந்திரமாம்!
இமாலய ஊழலுக்கும் இங்கு இனிப்புதுண்டு!
இன்றியமையா பொருட்களுக்குதான் இங்கு வரி உண்டு!
அரிசி பருப்பு ஆடம்பர பொருளாம்!
காரும் கைபேசியும் பாவம் எழைகளுக்காம்!
எங்கோ செல்கிறது இந்தியா!
கல் உடைத்து அடிமையானோம் அன்று!
கணினி தட்டி கொத்தடிமையானோம் இன்று!
சுதந்திரம் என்று சொல்லி
சினிமாவும் பொழுதும் களிப்போம் நன்று!
இதை தவிர வேறு எதை செய்வோம் நன்று!
வாழ்க பாரதம்!
பாவம் நம் பாரதம்!

எழுதியவர் : கார்த்திகா (15-Aug-13, 3:09 pm)
பார்வை : 69

மேலே