தோசை ரெடி

ஒருபக்கம் சுடுவது
ஓட்டல் தோசை
இருபக்கம் சுடுவது
வீட்டுத் தோசை
குழல் போல் வருவது
டெலிஸ்கோப தோசை
முக் கோணமாய் வருவது
பிரமிட் தோசை
உப்பி வந்தால் தோசை இல்லை
ஊத்தப்பம்
அது வெங்காயத்துடன்
வெந்து வந்தால் ....
ஆஹா ஆனந்தம்
எத்தனை தோசை
வந்தால் என்ன
அடுப்படியில்
அம்மா கிட்டே அமர்ந்து
அம்மா ஆசை ஆசையாய்
வார்த்துத் தரும் தோசைக்கு
ஈடாகுமா ?
முதல் ஆர்டர் யாருக்கு ?
ஒரு நெய் ய் ய் ய் ய் ய் .......ரோஸ்ட்
~~~கல்பனா பாரதி~~~