மட்டு நகரழகு

வாவி ஓடும் வடிவழகும்
வயல் நிறைந்த நெல் அழகும்
மலையழகு வெட்ட வெளியழகு
வேம்பு மர நிழல் அழகு ,,,
தெங்கு பனையழகு
தேர் ஓடும் கொக்கட்டி சோலை சிவன் அழகு

குளமஅழகு வளம் அழகு புலவர்கள் பாடிய கவியழகு
கடலழகு கரை சேரும் நுரையழகு
முனை அழகு சீமை பனையழகு
மட்டு நகரழகு வாவி ஓடும் நீரழகு ,,,,,

தேன் கொட்டும் தமிழ் அழகு தென் மோடி கூத்தழகு
மரபு அழகு மாமாங்க ஈஸ்வரர் தனியழகு ,,,,,
தீவழகு தீ மிதிக்கும் சடங்கு அழகு
திருமலை வீதியருகில் ஓடும் வாவியழகு ,,,,,,


குன்று குழி அழகு கூவி விடும் குயில் அழகு
ஊர் அழகு பெயர் அழகு உழவர் நிறைந்த மட்டு நகர் அழகு
வீரம் அழகு விசித்திரம் காட்டும் கொம்பு விளையாட்டழகு
வாகனேரி குளமஅழகு வாழைச் சேனை பெயரழகு ,
மூவினம் வாழும் மட்டு மண் அழகு
முகம் சுழிக்கா முறை சொல்லும் முறையழகு ,,,
வாவியில் ஓடும் மீனழகு மீன்மகள் பாடும் ஒசையழகு ,,,,,,
நண்டழகு நதியழகு நண்நீரும் இங்கு அழகு ,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா [மட்டு நகர் இளையதாரகை]

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (16-Aug-13, 1:06 pm)
பார்வை : 101

மேலே