கொல்ல வேண்டும்!

கொல்ல வேண்டும்

மீண்டும் மீண்டும் நேசிக்கும்
இதயத்தை
மீண்டும் மீண்டும் யாசிக்கும்
இதயத்தை

மீண்டும் மீண்டும் கற்பனை செய்யும்
இதயத்தை
மீண்டும் மீண்டும் காயப்படும்
இதயத்தை

மீண்டும் மீண்டும் துணை நாடும்
இதயத்தை
மீண்டும் மீண்டும் துயர் படும்
இதயத்தை

மீண்டும் மீண்டும் மீளா
இதயத்தை
மீண்டும் மீண்டும் வாழா
இதயத்தை

மீண்டும் மீண்டும் எதிர்பார்க்கும்
இதயத்தை
மீண்டும் மீண்டும் ஏமாறும்
இதயத்தை

மீண்டும் மீண்டும் தவறு செய்யும்
இதயத்தை
மீண்டும் மீண்டும் தண்டனை பெறும்
இதயத்தை

மீண்டும் மீண்டும் மறுக்கப்படும்
இதயத்தை
மீண்டும் மீண்டும் நொறுக்கப்படும்
இதயத்தை

கொல்லத்தான் வேண்டும்!

-தமிழ்மணி

எழுதியவர் : தமிழ்மணி (18-Aug-13, 12:20 pm)
பார்வை : 147

மேலே