விந்தைமிகு கிருத்துவ நண்பனுக்கு… நெஞ்சம் வெம்பும் கண்ணீர் கவிதாஞ்சலி!

நண்பனிடம் நன்குப்பழகி நாள்கடத்திய காலம்
நண்பன் கர்த்தரடி சேர்ந்ததினால் நலிகின்றதே தேகம் !

பழகாமல் இருந்திருந்தால் பாரம் ஏதுமில்லை
பழகியதால்தானே இந்த பாசவுள்ளத்தில் தொல்லை !

எப்போதும பார்க்கும் அந்த எதிரெதிர் கண்கள்
பார்த்ததுமே பூக்குமப்பா பொன்சிரிப்பு பூக்கள் !

நாடி ஓடி கூடி பாடி திரிந்த பொன்மாலை – இனி
தேடினாலும் கிடைக்காது அந்த பொன்வேளை !

ஓடிஓடி உறவாடியதின் பலனா உன்மரணம் ?
அட காலனே கருணைவுனக்கு கொஞ்சமேனும் வரனும்!

நல்நட்பின் அடையாளம் ஆளூளகில் ஏராளம் – அதிலும்
நம்நட்பின் ஆதாரம் ஆண்டவணின் அவதாரம் !

ஏங்கிதவிக்கும் ஆழ்மனது உன்னைக்காண துடிக்குது
வீங்கியவன் வாங்குகின்றேன் விரைந்தோடிவா நண்பா…!

காலமென்னும் கோழைதான் உன்னைக் காவுகொண்டான்
கண்காணாத கல்லறைக்குள் செல்லரிக்கச் செய்தான் !

காலத்தை கொல்வதற்கு நமக்கேது துணிவு ? மீண்டும்
கோலத்தை பெறுவதற்கு வேண்டும் இறை பணிவு !

உற்சாகம்தான் உன்னைக்காண; உயிர்ப்பெறுமா உன்னாஆன்மா ?
எல்லோருக்கும் இதே அவா ! ஈடேறுமா எங்கள் கனா !!

அந்நாள் வரும்வரை ஆதரவாய் உன் குடும்பத்தாரை
அரவணைக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கும் !

ஆகவே ஆனதைப்பற்றி அதிகம் அவதியுறாமல்
ஆண்டவணின் நிழலில் அமைதியாய் இளைப்பாரு!

எழுதியவர் : இரா.மணிமாறன், கைபேசி : (18-Aug-13, 2:05 pm)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
பார்வை : 64

மேலே