மொழி
மொழியின் அருமை புரியவில்லை எனக்கு
உன் மௌனத்தின் வலி உணரும் வரை
என் சுவாசத்தில் கலந்த
உன் மௌனத்தின் அர்த்தம்
சில நொடிகளில்
என் இதயம் சென்று மோட்சம் அடைந்து விட்டது......
ஆனால் நீ மோட்சம் அடைந்ததை மறந்து
உன்னை தேடுகின்றது
என் இரு விழிகளும்,,,,,,,,,, என் இதயமும்......