அப்துல்லாஹ் பெரியார்தாசன்
வைதீக குடும்பத்தில் இவர் தோற்றம்
நாத்தீக கொள்கையில் இன்னும் சீற்றம்
பேராசிரியராய் இவர் பணி தொடக்கம்
ஈர்த்தது இஸ்லாம் மார்க்கம் மீது நாட்டம்
ஏற்று கொண்டார் இறைவன் ஒருவன் என்று !
மாறி விட்டார் அப்துல்லாஹ் பெயர் கொண்டு
ஆக்க பணிகளை அல்லாஹுவிற்க்காக என்று
அயராது செய்ய ஆயுத்தமானார் நின்று
இணை இல்லா மார்க்கம் இதுதான் என்று
இணைந்தார் ஈமான் மனதில் கொண்டு
அவர் வாபத்தான செய்தி கேட்டு கலக்கம்
அவர் இழப்பு எங்களுக்கு பெரிய வாட்டம்
இறைவா ! அவர் பாவங்களை மன்னித்து
திருப்பொருத்தத்தை தருவாய் ! ஆமீன் !!
கவிஞன். இறையடிமை.