ஆசையா பேராசையா ????

சொப்பணத்தில் வந்த உன்னை
சொந்தமாக்கி கொள்ள நினைத்தது
ஆசையா பேராசையா ????

பேனாவை பேப்பரில் ஊன்றினால்
கவிதை பூக்கவேண்டும்
ஆசையா பேராசையா ????

வறண்ட பூமியில் பிறந்துவிட்டு
வற்றா குளமாக ஆசை பட்டேன்
ஆசையா பேராசையா ????

சோலி போட்டு பார்த்தல்
சொர்க்கம் நீ என வேண்டும்
ஆசையா பேராசையா ????

வழியில் சுற்றி பார்த்தல் -என்
விழியில் நீயே தோன்ற வேண்டும்
ஆசையா பேராசையா ????

எழுதியவர் : (19-Aug-13, 8:57 pm)
பார்வை : 90

மேலே